இந்தியாவின் 48-வது சர்வதேச திரைப்பட விழா கோவா, பனாஜி நகரில் கடந்த 20-ந்தேதி முதல் நடைப்பெற்று வருகிறது. 28-ஆம் தேதிவரை நடைபெறும் இவ்விழாவில், பல உலக மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. 82 நாடுகளைச் சேர்ந்த 195 திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளன. இதில் 64 இந்திய திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
இது தவிர இந்தியன் பனோரமா என்னும் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. இந்த ஆண்டு இந்தப் பிரிவில் மொத்தம் 26 படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதில் 9 மராத்தி, 6 இந்தி, 2 தெலுங்கு மற்றும் உள்ள மொழிகளில் பாக்கிப் படங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.
தமிழில் இருந்து ஒரே ஒரு படம் மட்டும் தேர்வாகி உள்ளது. அம்ஷன் குமார் இயக்கத்தில் உருவான “மனுசங்கடா” என்னும் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய தமிழ் திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளன.
இதே போல கன்னடம், கொங்கணி, அசாமி, மலையாளம், ஒரியா ஆகிய மொழிகளில் இருந்தும் ஒரே படம் மட்டும் தேர்வாகி உள்ளது. பிரதான திரைப்பட வரிசையில் பாகுபலி-2 தெலுங்குப் படம் தேர்வாகி உள்ளது.
மேலும், ஜேம்ஸ்பாண்ட் படங்கள், கனடா திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட உள்ளது.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் இருந்து திரையுலகை சேர்ந்தவர்கள் கோவாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்திய நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், நடிகை கத்ரினா கைப் உள்பட இந்திய திரையுலக பிரபலங்களும் கோவாவில் முகாமிட்டுள்ளனர்.
-ஜி.கஜேந்திரன்.
