மலேசியாவில் ஆவணங்கள் இல்லாத 20 லட்சம் அன்னியத் தொழிளார்களை பதிவு செய்யும் பணி!  

மலேசியா துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் .

மலேசியா துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் .

மலேசியாவில்  முறையான ஆவணங்கள் இல்லாத 20 லட்சம் அன்னியத் தொழிளார்களை தேசிய அளவில் பதிவு செய்யும் பணி பிப்.15 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.

இவர்களை மறுபடியும் முறையாக வேலைக்கு அமர்த்தும் திட்டத்தின் அடிப்படையில் மலேசியா உள்துறை அமைச்சகம் இந்தப் பதிவு வேலைகளைத் தொடங்க விருக்கிறது.

முதல் கட்டப் பதிவுப் பணி, மூன்று மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படும் இந்தக் காலக்கட்டத்திற்குள் இந்தப் பணிகளை எந்த அளவுக்கு சிறப்பாக மேற்கொள்ளமுடிகிறது என்பது ஆராயப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் தெரிவித்தார்.

-ஆர்.மார்ஷல்.