தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகளில் வாகன பழுதுபார்ப்பு சேவைகளை மேம்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பயணத்தை எளிதாக்குதல், வசதிகள் கிடைப்பதை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகளில் வாகன பழுதுபார்ப்பு, பஞ்சர் சரி செய்தல் வசதிகளை வெகு விரைவில், ஏற்படுத்துமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தமக்கு சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்து நிர்வாக நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோருக்கு உரிய நேரத்தில் எந்திரவியல் உதவி கிடைப்பதை உறுதி செய்து அசௌகரியம், காலதாமதம் ஆகியவற்றைத் தவிர்ப்பது, பாதுகாப்பு தொடர்பான உதவியை அளிப்பது ஆகியவை இதன் நோக்கமாகும்.

சாலையோர அமைப்புகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட குறிப்பிட்ட வசதிகளுக்கும் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட மேலும் சில வசதிகளும் இதன் மூலம் வழங்கப்படும். ஒப்பந்த கட்டமைப்புக்குள் வாகனப் பழுதுபார்ப்பு கடைகளும் பஞ்சர் சரிபார்ப்பு வசதிகளும் சேர்க்கப்படும்.

இத்தகைய வசதிகளை உருவாக்குவது உலகத்தரத்திலான தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதையும் தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களுக்கு தடையில்லாத போக்குவரத்து சேவைகளை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

Leave a Reply