நினைவிழந்த நிலையிலேயே அப்துல் கலாம் உயிர் பிரிந்தது!

Dr.-Abdul-Kalam

APJ ABDULKALAM.1

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.), 27.07.2015 நடைபெற்ற நிகழ்ச்சியில் மாலை 6.30 மணி அளவில் அவர் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென்று உடல் நல கோளாறு ஏற்பட்டது. உடனே, அவர் மயக்கம் அடைந்தார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே, அவரை அங்கிருந்து அந்த பகுதியில் உள்ள பெதானி என்ற தனியார் மருத்துவமனைக்கு மாலை 7 மணிக்கு கொண்டு சென்றனர்.

???????????

???????????

பெதானி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்தி அறிக்கை.

பெதானி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்தி அறிக்கை.

அப்துல் கலாமை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அப்துல் கலாம் 7.45 மணிக்கு மரணம் அடைந்தார்.

நினைவிழந்த நிலையிலேயே அப்துல் கலாம் கொண்டுவரப்பட்டார் என்றும், அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை முறையில் சுவாசம் செலுத்தப்பட்டது என்றும், அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர் என்றும், ஆனாலும், பலன் இல்லாமல் போய்விட்டது என்று, பெதானி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.