மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அலரி மாளிகையில் வசித்த மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு, உணவு வழங்கிய ஹில்டன் ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு, 94 இலட்ச ரூபாய் பில் தொகை கொடுக்கவில்லை என மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச குடும்பமும், சுற்றமும் ஒருநாள் காலை உணவிற்காக 94 இலட்ச ரூபாவினை செலவிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாட்டு தலைவர்கள் மாநாடு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ச குடும்பமும், நண்பர்களும் ஒருவேளை காலை உணவிற்காக மட்டும் 94 இலட்ச ரூபாய் செலவிட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின், அப்போதைய செயலாளர் லலித் வீரதுங்கவின் பெயருக்கு, ஹில்டன் ஹோட்டல் நிர்வாகம் விலைப்பட்டியலை அனுப்பி வைத்துள்ளது.
வெள்ளை, கறுப்பு கொக்லடன் பூசப்பட்ட நுவரெலிய ஸ்டோபரி, கறுப்பு கொக்லட்டில் மூழ்கடிக்கப்பட்ட மாம்பழம், கிறீம் சீஸ், வெள்ளரி சான்ட்விட்ச், மீன் சான்ட்விட்ச், அபெல் டெனிஸ், அன்னாசி டெனிஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் பெறப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடையும் வரை இந்த பணம் செலுத்தப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார்.
-வினித்.
