ஜெ.ஜெயலலிதா விடுதலையானதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தேவையில்லை: காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பிரிவுத் தலைவர் தனஞ்ஜெயா கடிதம்!

C.M. Dhananjaya c.m.dhananjaya with kpcm c.m.dhananjaya

ஜெ.ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தேவையில்லை என்று கர்நாடக அரசை, அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பிரிவுத் தலைவர் C.M.தனஞ்ஜெயா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து C.M.தனஞ்ஜெயா கர்நாடக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில், ”ஜெ.ஜெயலலிதா மீதான வழக்கை, சுப்பிரமணியன் சுவாமி தான் தாக்கல் செய்தார்.

முதலில் தமிழக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படியே கர்நாடகாவிற்கு அந்த வழக்கு மாற்றப்பட்டது.

ஜெ.ஜெயலலிதா மீதான வழக்கில், கர்நாடக அரசின் செயல்பாடு நிர்வாக ரீதியிலானது மட்டுமேயன்றி, நீதித்துறை சார்ந்தது அல்ல.

இந்த வழக்குத் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றம், அல்லது உயர் நீதிமன்ற விசாரணையிலோ, அல்லது வாதங்களிலோ, ஒரு தரப்பாக கர்நாடக அரசு செயல்படவில்லை.

மேலும், இந்த வழக்கு தமிழகத்திலிருந்து மாற்றப்பட்டபோது, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கு விசாரணை கர்நாடகாவில் நடைபெறுவதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.

அதனால், இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வது, நல்லதொரு அணுகுமுறையாக இருக்காது” என்று C.M.தனஞ்ஜெயா கூறி உள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in