2024 பொதுத்தேர்தலின் 5-ம் கட்டத்தில் வாக்காளர்கள் வருகை 62.2% ஆகப் பதிவாகியுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் 2024 பொதுத்தேர்தலின் 5-ம் கட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 20.05.2024 தேதியிட்ட இரண்டு செய்திக்குறிப்புகளின் தொடர்ச்சியாக, வாக்காளர்கள் வருகை 62.2% ஆகப் பதிவாகியுள்ளது.  5-ம் கட்டத்தில் பாலினவாரியாக வாக்காளர்களின் வருகை கீழே தரப்பட்டுள்ளது:

கட்டம் ஆண்வாக்காளர்கள் பெண்வாக்காளர்கள் மூன்றாம்பாலினத்தவர் ஒட்டுமொத்தவாக்காளர்கள்
5 61.48% 63.00% 21.96% 62.2%

கட்டம் – 5

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாகவும் பாலின வாரியாகவும் பதிவான வாக்குகள்

வரிசைஎண் மாநிலம்/யூனியன்பிரதேசம் மக்களவைதொகுதிகளின்எண்ணிக்கை வாக்குப்பதிவு (%)
ஆண் பெண் மற்றவர்கள் மொத்தம்
1 பீகார் 5 52.42 61.58 6.00 56.76
2 ஜம்மு காஷ்மீர் 1 62.52 55.63 17.65 59.10
3 ஜார்கண்ட் 3 58.08 68.65 37.50 63.21
4 லடாக் 1 71.44 72.20   71.82
5 மகாராஷ்ட்ரா 13 58.28 55.32 24.16 56.89
6 ஒடிசா 5 72.28 74.77 22.09 73.50
7 உத்தரப் பிரதேசம் 14 57.60 58.51 14.81 58.02
8 மேற்கு வங்கம் 7 78.48 78.43 38.22 78.45
8மாநிலங்கள்/யூனியன்பிரதேசங்கள் 49 61.48 63.00 21.96 62.20

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply