மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக வி.ரமேஷ் பாபு நியமனம்.

வி. ரமேஷ் பாபு, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக 2024 மே 21 அன்று பதவியேற்றார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங் வழங்கப்பட்டது.

திரு வி. ரமேஷ் பாபு, அனல் மின் பொறியியல் துறையில் எம்.டெக் பட்டமும், எந்திரப் பொறியியலில் பி.டெக் பட்டமும் பெற்றுள்ளார். இவர் 2020 மே மாதம் முதல் ஓய்வு பெறும் வரை தேசிய அனல் மின் கழக இயக்குநர் (செயல்பாடுகள்) பதவியை வகித்தார். இதற்கு முன் இந்நிறுவனத்தில் அவர் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் சட்டம், 1998 விதிகளின் கீழ் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இந்த ஆணையம், தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply