இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை சார்பில் சேவைக்கான மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கான டெர்பி காலணிகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சேவைக்கான மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கான டெர்பி காலணிகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை சார்பில் இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அமைவனத்தின் சென்னைக் கிளை இயக்குநர் திருமதி பவானி சிறப்பு விருந்தினர்களையும், பங்கேற்பாளர்களையும் வரவேற்றார். அப்போது பேசிய அவர், டெர்பி காலணிகள், திறந்த லேசிங் பாணியில் தயாரிக்கப்படுவதாகவும், காலணியின்  மேற்பரப்பில் லேஸ்  கட்டும்  பகுதியின்  இடையே ஒரு திறந்த இடம் உள்ள வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இது கால்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிப்பதாக அவர் தெரிவித்தார். டெர்பி காலணிகள் நேர்த்தியான தோற்றத்தைக் கொண்டுள்ளன. இவை  முறையான அலுவல் நிகழ்ச்சிகளுக்கும் சாதாரண  நிகழ்ச்சிகளுக்கும்  அணியக்கூடியவை என்று அவர் கூறினார்

இந்நிகழ்ச்சியில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply