உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸின் முக்கிய தலைவரான சாம்பிட்ரோடா தமிழர்களை ஆப்பிரிக்கர்கள் போல் இருப்பதாக கூறியபோது எங்கே இருந்தீர்கள்!-மு.க.ஸ்டாலினுக்கு கே.அண்ணாமலை பதிலடி.

ஒடிசா மாநிலத்தின் நிழல் முதல்வராக செயல்பட்டு, ஒட்டு மொத்த அதிகாரத்தையும் தன் கைக்குள் வைத்துக்கொண்டிருக்கும் திரு வி.கே. பாண்டியனை குறிக்கும் விதமாகவே நமது பாரத பிரதமர் அவர்கள் “தமிழ்நாடு” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

மற்றபடி, கும்மிடிப்பூண்டி தாண்டி நடக்கும் அரசியலை பற்றி எந்த புரிதலும் இல்லாமல், வடஇந்திய மக்களையே வெறுப்போடும் வன்மத்தோடும் அணுகுகிற ஒரு கட்சியின் தலைவருக்கு இது புலப்படாமல் இருப்பதில் ஆச்சிரியமில்லைதான்.

தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பிரதமர் மோடி வைத்திருக்கும் அன்பினை இம்முறை தமிழக பாரதிய ஜனதா கட்சி பெறப்போகிற வாக்குகள் பேசும்…!

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply