மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நேர்மையான, முறைகேடு இல்லாத தேர்தலை உறுதி செய்யும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கு நடுவில் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பதை தவிர்க்க வேண்டும் எனக் கோரி, திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கேசவானந்த பாரதி மற்றும் ராமேஸ்வர் பிரசாத் ஆகிய வழக்குகளில் தேர்தல் என்பது ஜனநாயக அடிப்படையில் வெளிப்படையாக, நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒப்புகைச்சீட்டு இயந்திரத்துடன் இணைத்துவிட்டால், வாக்குப்பதிவு இயந்திரம் கட்டுப்பாட்டு இயந்திரத்தின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வராது. எனவே, தேர்தலுக்கு முன்பாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்து, இந்த தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply