ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் (ABHA) பற்றிய விளக்கம் .

ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் (ABHA) என்பது இந்தியாவின் முதன்மை தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் (AB-PMJAY) ஒருங்கிணைந்த அங்கமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பணமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் சுகாதார சேவைகள் தொடர்பான நிதி அம்சங்களை நிர்வகிக்கும் வகையில் சுகாதாரக் கணக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்:

ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு (ABHA) என்பது ஒரு நபரின் அனைத்து சுகாதார பதிவுகளையும் இணைக்க பயன்படுத்தப்படும் கணக்கு எண்ணாகும். இத ஒரு டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பை உருவாக்குகிறது.

குறிக்கோள்:

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த தடையற்ற மற்றும் திறன் வாய்ந்த நிதிக் கட்டமைப்பை வழங்குவதை ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றை உறுதி செய்கிறது.

முக்கிய அம்சங்கள்:

ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை, மின்னணு சுகாதார பதிவுகள், இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் சேவைகளைப் பெறும் தன்மை, உடனடி தகவல் கண்காணிப்பு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.

முக்கிய தன்மைகள்:

பயனாளிகளுக்கு தனிப்பட்ட அடையாளம், சிறந்த மற்றும் பாதுகாப்பான நிதி மேலாண்மை, விரைவான உரிமை கோரல் தீர்வுகள், தணிக்கை மற்றும் கண்காணிப்பு ஆகியவை உறுதி செய்யப்படுகிறது.

பலன்கள்:

நிதி பாதுகாப்பு, திறன் வாய்ந்த சுகாதார சேவை வழங்கல், தரவுகள் அடிப்படையிலான முடிவுகள் 14 இலக்க எண் போன்றவற்றின் மூலம் உடல்நலம் தொடர்பான தகவல்களை எங்கிருந்தும் சிரமமின்றி அணுகவும் பகிரவும் முடியும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply