அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-பிரைம் என்ற புதிய தலைமுறை ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் அணு ஆயுதப்பிரிவு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதித்தது .

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-பிரைம் என்ற புதிய தலைமுறை ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து 2024 ஏப்ரல் 03 இரவு 7.00 மணியளவில் அணு ஆயுதப்பிரிவு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதித்தது.

இந்த சோதனை நிகழ்வில் பாதுகாப்புப் படைகளின் தளபதி, அணு ஆயுதப் பிரிவுத் தலைவர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அணு ஆயுதப்பிரிவு மற்றும் ஆயுதப்படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணையை வெற்றிகரமாக உருவாக்கி படையில் இணைத்துள்ளதன் வாயிலாக   ஆயுதப் படைகளுக்கு வலிமை கிட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply