2023-24 நிதியாண்டில் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி ரூ .21,083 கோடியை எட்டியது, இது கடந்த நிதியாண்டை விட 32.5% அதிகரித்துள்ளது; தனியார் துறை 60%, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் (டிபிஎஸ்யூ) – 40% பங்களிப்பு செய்துள்ளன .

2023-24 நிதியாண்டில் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.21,083 கோடியை (சுமார் 2.63 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டி, கடந்த நிதியாண்டில் ரூ.15,920 கோடியாக இருந்ததைவிட 32.5% அதிகரித்துள்ளது. 2013-14 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி 31 மடங்கு அதிகரித்துள்ளதை சமீபத்திய புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தனியார் துறை மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் தொழில்துறை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதியை அடைவதற்கு மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. தனியார் துறையும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும் முறையே 60% மற்றும் 40% பங்களிப்பை செய்துள்ளன.

இந்த வளர்ச்சி இந்தியப் பாதுகாப்புத் தளவாட தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு உலகளாவிய ஏற்பின் பிரதிபலிப்பாகும். 

sபாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை எட்டியதற்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply