சென்னை பைபாஸ் திருச்சி சஞ்சீவி நகர் சந்திப்பில் நடக்கும் சாலை விபத்துக்களை தடுப்பதற்கு எச்சரிக்கை பலகை மற்றும் சாலையில் குறியீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் சஞ்சீவி நகர் அருகே எட்டு திசையில் இருந்தும் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு தொடர்ந்து உயிர் பலிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சஞ்சீவி நகர் சந்திப்பில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி பலமுறை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து விரிவான செய்தியை நாம் பலமுறை வெளியிட்டு இருக்கிறோம்.

இந்நிலையில் திருச்சி- கல்லணை சாலையில் அமைந்துள்ள பனையக்குறிச்சி சர்க்கார் பாளையம் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதிப் குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 22/01/2024 அன்று மாலை 4.30 மணியளவில் காவல்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் கருத்து கேட்பு மற்றும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் சார்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் சஞ்சீவி நகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றும் இதற்கிடையில் அப்பகுதியில் சாலை விபத்துகளை தடுப்பதற்கு எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை குறியீடுகள் அமைக்கப்படும் என்றும் இரவு 10 மணி வரை போக்குவரத்து காவலர்கள் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் இருப்பார்கள் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களுக்கு உறுதி அளித்தார்.

அதன் அடிப்படையில் சென்னை பைபாஸ் திருச்சி சஞ்சீவி நகர் சந்திப்பில் நடக்கும் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை மற்றும் சாலையில் குறியீடு செய்யும் பணிகள் இன்று 03/02/2024 நடைபெற்றது

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டையம் பேட்டை அருகே அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதை போல் சஞ்சீவி நகர் அருகிலும் போர்க்கால அடிப்படையில் சுரங்க பாதை அமைக்காவிட்டால் இன்னும் பல உயிர்களை சாலை விபத்தில் இழக்க நேரிடும். எனவே தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2024/01/19/94619/

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040. editorutlmedia@gmail.com

Leave a Reply