ஓம் சர்வ சக்தி யோகா பிட்னஸ் சென்டர் சார்பில் யோகா 10 உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

“ஓம் சர்வ சக்தி யோகா பிட்னஸ் சென்டர்” 10 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு யோகா 10 உலக சாதனை நிகழ்வு குடியரசு தினமான இன்று (ஜனவரி 26) திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள மொராய் சிட்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்மா மகன் தரவரிசையில் முத்துலட்சுமி – சர்வேஸ்வரனும், சகோதர சகோதரிகள் தரவரிசையில் அட்ஷயா -சஞ்சய், சரிதா- ஜென்லி சூசன்னா மொராய்ஸ், தான்யலட்சுமி -கிஷன், ஸ்ரீலக்சன் – சதுர் விதா, ஹாசினி ஆகியோர் பங்கேற்றனர்.

உலக சாதனைப் படைத்த டாக்டர் டிராகன் ஜெட்லியின் Book of Records என்ற சாதனை புத்தகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

-சி.கார்த்திகேயன் , ullatchithagaval@gmail.com

Leave a Reply