18 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது முறையாக திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோதி!-ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருகோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

கடந்த 18 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோதி இன்று திருச்சிக்கு வருகை புரிந்தார். ஆம், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருகோயிலில் பிரதமர் நரேந்திரமோதி இன்று (20/01/2024) சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக இன்று (20/01/2024) காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோதி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்று கரை பஞ்சகரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்து சேர்ந்தார் அங்கிருந்து சாலை வழியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலை அடந்தார். அங்கு இன்று (20/01/2024) முற்பகல் 11 மணிமுதல் 12.30 மணிவரை சாமி தாரிசனம் செய்தார்.

முன்னதாக ஸ்ரீரங்கம் தெற்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்த பிரதமர் நரேந்திரமோதிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கருடாழ்வார், மூலவர் , தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளிலும், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் பிரதமர் நரேந்திரமோதி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயில் யானை ஆண்டாளிடம் ஆசிபெற்றார்.

இதனை அடுத்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து பிரதமர் நரேந்திரமோதி இராமாயண பாராயணத்தைக் கேட்டார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இரவு பகலாக ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணியும் சாலைகள் சீரமைப்பு பணிகளும், தூய்மை பணியும் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் மின் ஊழியர்களும் மற்றும் தெரு நாய்களை பிடிப்பதற்கு என்றே சிறப்பு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. பிரதமரின் வருகையை முன்னிட்டு ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் திருச்சியின் தீவு நகரமான ஸ்ரீரங்கத்தில் தான் முகாமிட்டிருந்தனர்.

கடந்த ஒரு வாரமாக காவல் துறை திருச்சி மாநகரம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040. editorutlmedia@gmail.com

Leave a Reply