ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார் .

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 19, 2023) ஹைதராபாத்தில் உள்ள ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் பேசிய குடியரசுத் தலைவர், ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலின் 100 ஆண்டு கால பயணத்தில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியைக் கற்பித்ததற்காக அதன் ஒட்டுமொத்த குழுவையும் பாராட்டுவதாக கூறினார்.

இப்பள்ளியில் கல்விச் சாதனைகள் மட்டுமின்றி, ஒழுக்க மேம்பாட்டிற்கும், முக்கியத்துவம் அளிக்கப்படுவது மகிழ்ச்சி தருவதாக அவர் தெரிவித்தார். இந்த நிறுவனம் தனது மாணவர்களை பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க ஊக்குவித்துள்ளது என்றும், நம் நாட்டிற்கு கண்ணியத்தையும், பெருமையையும் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்திற்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் போது, மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அனைத்து தரப்பினரும் மனதில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர்  கூறினார். மாணவர்கள் கல்வி அறிவைப் பெறுவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கைத் திறன்களையும் கற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply