கரக்பூர் ஐஐடியின் 69-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார் .

கரக்பூர் இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் (ஐஐடி) இன்று (டிசம்பர் 18, 2023) நடைபெற்ற 69-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நமது ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் நற்பெயர் உள்ளதாகக் கூறினார். ஐ.ஐ.டி.கள் திறமை மற்றும் தொழில்நுட்பத்தின் காப்பகங்களாகக் கருதப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.  நாட்டின் முதலாவது ஐ.ஐ.டி என்ற பெருமையை ஐ.ஐ.டி கரக்பூர் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நிறுவனம் சுமார் 73 ஆண்டுகால பயணத்தில் சிறந்த திறமையாளர்களைக் கண்டறிந்துள்ளதாகவும் நாட்டின் வளர்ச்சியில் அதன் பங்களிப்பு ஒப்பிட முடியாதது என்றும் கூறினார்.

ஐ.ஐ.டி.களின் சர்வதேசமயமாக்கல் கொள்கைக்கு இணங்க, ஐ.ஐ.டி கரக்பூர் மற்ற உலகளாவிய நிறுவனங்களுடன் கூட்டாண்மை, ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் ஐ.ஐ.டி கரக்பூரை நிறுவ உதவுவது மட்டுமல்லாமல், இந்தியக் கல்வி முறைக்கு உலகளாவிய அங்கீகாரத்தை வழங்குவதற்கான ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply