வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரையின்போது குந்தி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பிதாபூர் பஞ்சாயத்து மக்களுடன் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா கலந்துரையாடினார் .

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா தனது குந்தி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கர்சவான் வட்டத்தின் கீழ் உள்ள பிதாபூர் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். சுயஉதவிக் குழுக்கள், அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களைச் சேர்ந்த பெண்கள் அமைத்துள்ள அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.

2047 ஆம் ஆண்டிற்குள் நாடு ஒரு வளர்ந்த நாடாக மாறும் என்றும், உள்ளூர்வாசிகள் தங்கள் சுறுசுறுப்பான பங்கேற்புடன் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரை பிரச்சாரத்தை அதன் ஒற்றை நோக்க  முடிவுக்குக் கொண்டு செல்ல உறுதியேற்க வேண்டும் என்றும் திரு அர்ஜூன் முண்டா தனது உரையின் போது வலியுறுத்தினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி நாடு விரைவான முன்னேற்றம் மற்றும் செழிப்பை நோக்கி பயணித்து வருகிறது, கனவுகள் நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில்   கர்சவான் தொகுதியில் இருந்து  உஜ்வாலா பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்களை திரு அர்ஜுன் முண்டா வழங்கினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply