காசி தமிழ் சங்கமம் 2023-ஐப் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார் .

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வை வாரணாசியில் உள்ள நமோ படித்துறையில் பிரதமர் திரு  நரேந்திர மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். புனித நதியான ‘கங்கை’யின் பெயரிடப்பட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடங்கிய தமிழ் தூதுக்குழுவின் முதல் குழு இன்று புனித நகரமான காசியை (வாரணாசி) அடைந்தது. வாரணாசி கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் இங்கு தங்கியிருக்கும் போது, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் செல்வார்கள்.

ஆசிரியர்கள் (யமுனா), தொழில் வல்லுநர்கள் (கோதாவரி), ஆன்மீகம் (சரஸ்வதி), விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் (நர்மதா), எழுத்தாளர்கள் (சிந்து)  வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் (காவேரி) ஆகியோரைக் கொண்ட மேலும் ஆறு குழுக்கள் சங்கமத்தில் பங்கேற்க காசிக்கு வரவுள்ளன.

கலாச்சாரம், சுற்றுலா, ரயில்வே, ஜவுளி, உணவு பதப்படுத்துதல் (ஓடிஓபி), எம்.எஸ்.எம்.இ, தகவல் மற்றும் ஒலிபரப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் உத்தரபிரதேச அரசின் தொடர்புடைய துறைகளின் பங்கேற்புடன் மத்திய  அரசின் கல்வி அமைச்சகம் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பு முகமையாக உள்ளது.

பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கியமான கல்வி மற்றும் கலாச்சார மையங்களான காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான வாழும் பிணைப்புகளை புதுப்பிப்பதே இந்த மக்களுக்கு இடையிலான இணைப்பு திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த இரண்டு பாரம்பரிய அறிவு மற்றும் கலாச்சாரத்தை ஒன்றிணைப்பதையும், பகிரப்பட்ட பாரம்பரியம் குறித்த புரிதலை உருவாக்குவதையும், இந்த இரண்டு பிராந்தியங்களின் மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடையிலான பண்டைய அறிவுசார், கலாச்சார, ஆன்மீக மற்றும் கைவினை இணைப்பை மீண்டும் கண்டுபிடித்து வலுப்படுத்தும் நோக்கத்தையும் இந்த விழா கொண்டுள்ளது. 15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தமிழகம் மற்றும் வாரணாசியைச் சேர்ந்த பல்வேறு கலைக்குழுவினர் காசியில் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் காசியின் கலை மற்றும் கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பிற சிறப்பு தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்குகள்  அமைக்கப்பட்டுள்ளன. காசியில் உள்ள நமோ படித்துறையில் தமிழ்நாடு மற்றும் காசியின் கலாச்சாரங்களை ஒருங்கிணைக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். இந்த நிகழ்வின் போது, இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள், வணிக பரிமாற்றங்கள், கலந்துரையாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவை ஏற்பாடு செய்யப்படும். இது தவிர, தமிழ்நாடு மற்றும் காசியைச் சேர்ந்த பல்வேறு துறைகள் / தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள், உள்ளூர் பயிற்சியாளர்களும் இந்த பரிமாற்றங்களில் பங்கேற்பார்கள், இதனால் பல்வேறு துறைகளில் பரஸ்பர கற்றலில் இருந்து நடைமுறை அறிவு / கண்டுபிடிப்புகளின் ஒரு அமைப்பு உருவாக முடியும்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமின்றி, காசியில் வசிப்பவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்க உள்ளனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply