நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான  9 மாதங்களில் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற ஜீ தொலைக்காட்சி தேசிய மாநாட்டின்போது, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அளித்த பிரத்யேக பேட்டியில், பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட  துணிச்சலான முடிவுக்குப் பின், இந்தியாவின் விண்வெளித் துறை தனியார் நிறுவனங்களுக்கு திறக்கப்பட்டுள்ளதால் இது சாத்தியமானது என்றார். இதன் விளைவாக தொழில்துறையினரிடமிருந்தும் தனியார் துறை முதலீட்டாளர்களிடமிருந்தும் அமோக வரவேற்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளித் துறையில் ஒரே ஒரு ஸ்டார்ட் அப் மட்டுமே இருந்த நிலையில், இந்தத் துறையைத் திறந்த பிறகு சுமார்  190 தனியார் விண்வெளித் துறை  ஸ்டார்ட் அப்கள் உள்ளன என்று அவர் கூறினார்.விண்வெளித் துறையில், “இன்ஸ்பேஸ்” என்ற ஒரு இடைநிலை நிறுவப்பட்டுள்ளது என்றும்  பிபிபி முறை திட்டங்களுக்கு வசதியாக “என்.எஸ்.ஐ.எல்” என்ற பொதுத்துறை நிறுவனமும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

காலாவதியான விதிகளை ரத்து செய்து, தொழில்நுட்பத்தை உகந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தில் பிரதமர் மோடி கவனம் செலுத்தினார். இதேபோல், ஸ்ரீஹரிகோட்டாவின் வாயில்கள் அனைத்துத்  தரப்பினருக்கும் திறக்கப்பட்டுள்ளன என்றார் டாக்டர் ஜிதேந்திர சிங்.

எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப வளர்ச்சியை உலகம் காணும் என்று கூறிய அவர்  செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா இப்போது முன்னிலை வகிக்கிறது என்றார்.   

திவாஹர்

Leave a Reply