கடல் கொள்ளையை கட்டுப்படுத்த சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்திய கடலோர காவல்படை குஜராத்தில் 15 வது திறன் மேம்பாட்டு மூத்த அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி வருகிறது .

இந்திய கடலோர காவல்படை 2023 டிசம்பர் 11 முதல் 15 வரை குஜராத்தின் காந்தி நகரில் ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை மற்றும் ஆயுதக் கொள்ளையை எதிர்த்துப் போராடுவதற்கான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தத்துடன் திறன் முன்னெடுப்பு மூத்த அதிகாரிகள் கூட்டத்தின் (ரெகாப்) 15 வது பதிப்பு நடைபெற்று வருகிறது.

பரஸ்பரம் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் அனைத்து ஒப்பந்தத் தரப்பினரின் கூட்டு அணுகுமுறையுடன் இதுபோன்ற சம்பவங்களைச் சமாளிக்க சிறந்த நடைமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ரெகாப்-க்கு நியமிக்கப்பட்ட இந்திய ஆளுநர் என்ற முறையில், இயக்குநர் ஜெனரல் ராகேஷ் பால் இந்த நான்கு நாள் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில் சர்வதேச மற்றும் தேசிய வல்லுநர்கள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர். 15 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 19 சர்வதேச பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், இந்திய கடற்படை, முக்கிய துறைமுகங்கள், மாநில கடல்சார் வாரியங்கள், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் பிற கடல்சார் அமைப்புகள் போன்ற தேசிய பங்கெடுப்பாளர்களின் மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கடற்கொள்ளையை ஒடுக்குவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முதல் மற்றும் ஒரே பிராந்திய அரசுக்கு இடையிலான ஒப்பந்தம் ரெகாப்  ஆகும். செப்டம்பர் 04, 2006 முதல் நடைமுறைக்கு வரும் ரெகாப் ஒப்பந்தத்தை அங்கீகரித்த 10 வது நாடாக இந்தியா சேர்ந்துள்ளது. இப்போது, 21 நாடுகள் ரெகாப் ஒப்பந்தத்தில் ஒப்பந்த தரப்பினராக உள்ளன. கடற்கொள்ளை குறித்த தகவல்களை உறுப்பு நாடுகளுக்கும், சிங்கப்பூரின் ரெகாப் தகவல் பகிர்வு மையத்திற்கும் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பை இந்திய அரசு ஐ.சி.ஜி.யிடம் ஒப்படைத்துள்ளது. ஐ.சி.ஜி 2011, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ரெகாப் ஐ.எஸ்.சி உடன் இந்தியாவில் திறன் மேம்பாட்டு பட்டறைகளை வெற்றிகரமாக நடத்தியது.

திவாஹர்

Leave a Reply