பிபர்ஜோய் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338.24 கோடி நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் .

பிபர்ஜாய் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.338.24 கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, இமாச்சலப் பிரதேசத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (என்.டி.ஆர்.எஃப்) ரூ.633.73 கோடி கூடுதல் நிதி உதவி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம், அதிகனமழை, நிலச்சரிவுகளால் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ் மத்திய அரசும், குஜராத் அரசும் மேம்பட்ட முன்னேற்பாடுகளைச் செய்து  உயிரிழப்புகளை தவிர்த்தன. மிகவும் கடுமையான பிபர்ஜோய் சூறாவளிக்குப் பிறகு, உள்துறை அமைச்சகம் உடனடியாக மாநில அரசின் கோரிக்கை மனுவுக்கு காத்திருக்காமல், சேதங்களை மதிப்பிடுவதற்கு அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய குழுவை (ஐ.எம்.சி.டி) அனுப்பியது. முன்னதாக மத்திய அரசு தனது பங்கின் முதல் தவணையான ரூ.584 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (எஸ்.டி.ஆர்.எஃப்) வழங்கியது.

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம், அதிகனமழை, நிலச்சரிவுகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நிவாரணம் வழங்குவதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அணுகுமுறையைப் பின்பற்றி, சேதங்களை மதிப்பிடுவதற்கான அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய குழு மாநில அரசின் கோரிக்கை மனுவுக்கு காத்திருக்காமல் அனுப்பப்பட்டது. உடனடி நிவாரண நடவடிக்கைகளை நிர்வகிப்பதில் இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவுவதற்காக 2023 ஆகஸ்ட் 21 அன்று தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.200.00 கோடி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது. முன்னதாக மத்திய அரசு தனது பங்கின் இரண்டு தவணைகளையும் தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து மாநில பேரிடர் மீட்பு நிதிக்கு வழங்கியது, மொத்தம் ரூ.360.80 கோடி ஆகும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply