ஜம்மு-காஷ்மீரில் அமலில் இருந்த 370-வது பிரிவை ரத்து செய்த முடிவை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் அமலில் இருந்த 370-வது பிரிவை ரத்து செய்த முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, வரவேற்றுள்ளார்.

தனது சமூக ஊடக எக்ஸ் பதிவில், “370 வது பிரிவை ரத்து செய்யும் முடிவை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி, பிரதமர் திரு நரேந்திர மோடி 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான தொலைநோக்கு முடிவை எடுத்தார். 370 வது பிரிவை ரத்து செய்த பின் ஜம்மு காஷ்மீரில் அமைதியும்  இயல்புநிலையும் திரும்பியுள்ளது.

ஒரு காலத்தில் வன்முறையால் சிதைந்த பள்ளத்தாக்கில், வளர்ச்சியும் மேம்பாடும் மனித வாழ்க்கைக்குப் புதிய அர்த்தத்தைக் கொண்டு வந்துள்ளது. சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளில்  செழிப்பு ஏற்பட்டுள்ளது.  ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டிலும் வசிப்பவர்களின் வருமான அளவை உயர்த்தியுள்ளது. 370-வது பிரிவை ரத்து செய்யும் முடிவு முற்றிலும் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்பதை இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிரூபித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் மேலும் கூறுகையில், 370 வது பிரிவை ரத்து செய்த பின் ஏழைகள் மற்றும் உரிமை மறுக்கப்பட்டவர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன, பிரிவினைவாதம், கல்வீச்சு ஆகியவை இப்போது கடந்த கால விஷயங்கள் ஆகிவிட்டன. இப்பகுதி முழுவதும் இப்போது இனிமையான இசை மற்றும் கலாச்சார சுற்றுலா நிகழ்வுகள் எதிரொலிக்கின்றன. ஒற்றுமையின் பிணைப்புகள் வலுவடைந்துள்ளன, மேலும் இந்தியாவுடனான ஒருமைப்பாடு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை எப்போதும் நம் நாட்டிற்கு சொந்தமானவை, அவை தொடர்ந்து இருக்கும். பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ், ஜம்மு காஷ்மீர், லடாக்கில் நீடித்த அமைதியை நிறுவுவதற்கும், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அரசு உறுதிபூண்டுள்ளது. புதிய சலுகைகள் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவது, அதிநவீன கல்வி உள்கட்டமைப்பை உருவாக்குவது அல்லது ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என எதுவாக இருந்தாலும், பிராந்தியத்திற்காக முழு சக்தியையும் அரசு தொடர்ந்து பயன்படுத்தும் என்று கூறியுள்ளார்

எம்.பிரபாகரன்

Leave a Reply