புத்தொழில் மாநாடு-2023-ன் வட்டமேசை நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்.

துடிப்பான குஜராத் 2024 உச்சிமாநாட்டின் முன்னோட்ட நிகழ்வாக காந்திநகரில் நடைபெற்ற புத்தொழில் மாநாடு 2023-ன் வட்டமேசை நிகழ்வில் மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு தர்மேந்திர பிரதான், வானம் எல்லை அல்ல என்பதை இந்தியாவின் தொழில்முனைவோர் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருவதாகக் கூறினார். அவர்களின் யோசனைகள், படைப்பூக்கம்  மற்றும் கண்டுபிடிப்புகள் மிகவும் நிலையான, வளமான மற்றும் சமத்துவமான உலகத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் இந்தியா 3 வது பெரிய ஸ்டார்ட் அப் சூழல் கொண்ட நாடாக மாற்றியுள்ளது என்று திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply