தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு 2 புதிய வால்வோ பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இந்தப் பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.29) முகாம் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் 60 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள அச்சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply