10 நாட்களுக்கு பிறகு மேட்டுப்பாளையத்தில் மீண்டும் தொடங்கிய மலை ரயில் சேவை!

உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3-ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மலை ரயில் கடந்து செல்லும் மலைப்பாதையில் கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டதால் கடந்த 4 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை என 4 நாட்கள் மட்டும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு கடந்த 8 ம் தேதி மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

எஸ்.திவ்யா

Leave a Reply