கஞ்சா போதை பொருட்கள் புழக்கத்தை தமிழக அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்!-ஜி‌.கே.வாசன் வலியுறுத்தல்.

சென்னை, அண்ணாநகரில் கஞ்சா போதையில் கார் ஓட்டிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர், நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக இளைஞர்கள் மதுவிற்கும், கஞ்சாவிற்கும் அடிமையாகி மிகவும் மோசமாக சீரழிந்து வருகின்றனர். கஞ்சா, மதுவினால் ஏற்படும் போதையால் கொலை, கொள்ளை, பாலியியல் வன்கொடுமை என்று பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் தினம்தோறும் வரும் செய்திகள் மனதை பதறவைக்கிறது.

மதுவின் தாக்கம், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பரவக்கூடிய அபாயம் உள்ளது. இந்த விபரீதத்தை தமிழக அரசு உணர வேண்டும். அரசு போதைப் பொருள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அவை இல்லை என்பது தற்பொழுது நடக்கும் கொலை, கொள்ளை, பாலியியல் வன்கொடுமை செய்திகளே எடுத்துக்காட்டு.

தமிழக காவல்துறை கஞ்சா பொருட்கள் புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். அதனை விற்பவர்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழக அரசு வார்த்தையோடு இல்லாமல் அதனை நடைமுறையில் உறுதிப்படுத்த வேண்டும். வருங்கால தமிழகம் போதையில்லா தமிழகமாக மலரவேண்டும்.

அண்ணாநகரில் போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி‌.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply