தொழில்நுட்ப வல்லுநர்கள் குடிமைப் பணிகளுக்கு மதிப்பு சேர்த்து மேம்படுத்த முடியும்: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்

குடிமைப் பணிகளை நிறைவேற்றுவதில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மதிப்புகளைக் கூட்டி அவற்றை மேம்படுத்த முடியும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார், தில்லி இந்திய தொழில் நுட்ப கழகத்தின் (ஐஐடி) முன்னாள் மாணவர்கள் பொது சேவை தின விழாவில் இன்று (29-10-2023) அவர் உரையாற்றினார்.

தொழில்நுட்ப வல்லுநர்களின் கல்விப் பின்னணியும் அவர்களின் நிபுணத்துவமும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசால் தொடங்கப்பட்ட பல முதன்மைத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற உதவும் என்று அவர் தெரிவித்தார்.  குறிப்பாக ஸ்வாமித்வா, விரைவு சக்தி பெருந்திட்டம், நேரடிப் பணப்பரிமாற்றத் திட்டம், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கான முக அங்கீகார தொழில்நுட்பம் போன்றவை தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா இப்போது புதுமையான தொழில்நுட்பங்களில் உலகை வழிநடத்துகிறது என்று அவர் தெரிவித்தார். கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியம் என்ற நிலையை அடைவதற்கான இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது என்றார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply