மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!-ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.

தூத்துக்குடி மாவட்டம் தருவகைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கதக்கது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கியும், அவர்கள் விலையுயர்ந்த பொருள்களை கொள்ளையடித்தும் மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி வருகிறார்கள்.

ஓருபுறம் இப்படியென்றால், மறுபுறம் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தொடர் அச்சுறுத்தலால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்திய கடற்படை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப்பட்டு தமிழக மீனவர்கள் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மாலத்தீவு அரசுடன் பேசி கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்‌ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply