சங்கீத நாடக அகாடமி அமிர்த விருதுகளை நாளை வழங்குகிறார் குடியரசுத் துணைத் தலைவர்- நிகழ்த்துக் கலைகளில் சிறந்து விளங்கும் 84 கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

நாட்டில் உள்ள 75 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இதுவரை தேசிய அளவில் கௌரவிக்கப்படாத, நிகழ்த்து கலைப் பிரிவைச் சேர்ந்த கலைஞர்கள் 84 பேருக்கு சங்கீத நாடக அகாLமி அமிர்த விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் புதுதில்லியில் நாளை (16.09.2023) வழங்குகிறார். 

இது குறித்து சங்கீத நாடக அகாடமியின் தலைவர் டாக்டர் சந்தியா ப்ரேச்சா இன்று (15.09.2023) செய்தியாளர்களிடம் பேசுகையில், சங்கீத நாடக அகாடமி அமிர்த விருதுகள் என்பது நிகழ்த்து கலைப் பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்களுக்கு வழங்கப்படும் ஒரு தேசிய கௌரவமாகும் என்று கூறினார். அகாடமியின் பொதுக் குழுவால், புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த விருது ரூ.1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய்) பணப்பரிசு மற்றும் ஒரு பாராட்டு பத்திரம் ஆகியவை அடங்கியது என்று அவர் கூறினார்.

சங்கீத நாடக அகாடமி அமிர்த விருதுகள் நாளை புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் குடியரசு துணைத் தலைவரால் வழங்கப்படுகிறது. இதில் கலாச்சாரத் துறை இணை அமைச்சர்கள் திரு அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் திருமதி மீனாட்சி லேகி ஆகியோரும் பங்கேற்கின்றனர். விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து 2023 செப்டம்பர் 16 முதல் 20-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு புதுதில்லி பெரோஸ் ஷா சாலை, 35, சங்கீத நாடக அகாLமியின் மேக்தூத் வளாகத்தில் சங்கீத நாடக அகாடமியின் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

திவாஹர்

Leave a Reply