மத்தியப் பிரதேச மாநிலம் பினாவில் ரூ.50,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தின் பினாவில் ரூ.50,700 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின்   (பிபிசிஎல்) பினா சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகம் சுமார் 49,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் திட்டங்களில் அடங்கும்;  நர்மதாபுரம் மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்; இந்தூரில் இரண்டு ஐடி பூங்காக்கள்; ரத்லாமில் ஒரு மெகா தொழில் பூங்கா;  மத்தியப் பிரதேசம் முழுவதும் ஆறு புதிய தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், புந்தேல்கண்ட் போர் வீரர்களின் பூமி என்று குறிப்பிட்டார். ஒரு மாதத்திற்குள் மத்தியப் பிரதேசத்தின் சாகருக்கு விஜயம் செய்வதைக் குறிப்பிட்ட அவர், இந்த வாய்ப்பிற்காக மத்தியப் பிரதேச அரசுக்கு நன்றி தெரிவித்தார். சந்த் ரவிதாஸ்  நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இன்றைய திட்டங்கள் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலை வழங்கும் என்று பிரதமர் கூறினார். இந்தத் திட்டங்களுக்காக மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது, இது நாட்டின் பல மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகமாகும் என்று அவர் தெரிவித்தார். “இது மத்தியப் பிரதேசத்திற்கான எங்கள் தீர்மானங்களின் மகத்தான தன்மையைக் குறிக்கிறது”, என்று அவர் மேலும் கூறினார்.

 நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உறுதி பூண்டுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  பினா சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட திரு. மோடி, பெட்ரோகெமிக்கல் துறையில் தற்சார்பு திசையில் இது ஒரு படி முன்னோக்கி இருக்கும் என்றார். பெட்ரோகெமிக்கல்கள் அதன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறிய அவர், “பினா சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகம் முழு பிராந்தியத்திலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும். வளர்ச்சியை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று கூறினார்.  இது புதிய தொழில்களுக்கு வழிவகுக்கும் என்பது மட்டுமல்லாமல், சிறு விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு பயனளிக்கும் மற்றும் இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார். உற்பத்தித் துறையின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய பிரதமர், 10 புதிய தொழில் திட்டங்களுக்கான பணிகள் இன்று தொடங்கப்படுவது குறித்துத் தெரிவித்தார். நர்மதாபுரம், இந்தூர் மற்றும் ரத்லம் ஆகிய இடங்களில் உள்ள திட்டங்கள் மத்திய பிரதேசத்தின் தொழில்துறை திறனை அதிகரிக்கும் என்றும், இது அனைவருக்கும் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திவாஹர்

Leave a Reply