அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள்!- மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை.

சென்னை நீலாங்கரையில் உள்ள அரங்கத்தில் 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்கினார்.

அதன்படி முதல் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசளித்து கவுரவித்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply