செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறலாம்! எய்ம்ஸ் மருத்துவர்களும் காவேரி மருத்துவமனையில் அவரை பரிசோதனை மேற்கொள்ளலாம்!-சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் உண்மை நகல்.

Hon’ble Tmt. Justice J. Nisha Banu.

Hon’ble Mr. Justice D.Bharatha Chakravarthy.

downloaded_watermark-1

சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தியது.

அமைச்சர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று தெரிவித்தார். செந்தில் பாலாஜியை வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், சரியான நடைமுறைகள் பின்பற்றாமல் ரிமாண்ட் செய்யப்பட்டால், ஆட்கொணர்வு மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் எடுத்துரைத்தார். இந்த ஆட்கொணர்வு மனு ஏற்புடையது என்று தெரிவித்த அவர், சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அவர் தனது வாதத்தில் தெரிவித்தார்.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆட்கொணர்வு மனு மூலம் ரிமாண்ட் செய்யப்பட்டதை எதிர்க்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கொள் காட்டினார். மேலும், சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்கில் சாதாரண குற்றவியல் நடைமுறைச் சட்டம் பொருந்தாது என்றும்; மேலும், தமிழகத்திலேயே மிகச் சிறந்த மருத்துவமனை என்று சொல்லக்கூடிய ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வேறொரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு என்ன காரணம்? அதுபோல், டெல்லியைச் சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்த பிறகுதான் மற்ற மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்க முடியும்” என அமலாக்கத் துறை சார்பில் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை சிகிச்சைக்காக, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமைச்சரின் உடல்நலக் குறைபாடு தொடர்பாக அரசு மருத்துவர்கள் அளித்த பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்களும், காவேரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளலாம்.

மேலும், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply