முதலாவது தேசிய பயிற்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி நாளை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (11 ஜூன், 2023) காலை 10:30 மணிக்கு புது தில்லியில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையமான பிரகதி மைதானத்தில் முதலாவது தேசிய பயிற்சி மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் உரையாற்றுவார்.

குடிமைப்பணியின் திறனை வளர்ப்பதன் மூலம் நாட்டில் ஆட்சி செயல்முறை மற்றும் கொள்கை அமலாக்கத்தை மேம்படுத்துவதில் பிரதமர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, குடிமைப்பணி திறன் மேம்பாட்டுக்கான தேசியத் திட்டமான ‘மிஷன் கர்மயோகி’, சரியான அணுகுமுறை, திறன்கள் மற்றும் நுண்ணறிவைக் கொண்டு எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் குடிமைப்பணியைத் தயாரிக்கத் தொடங்கப்பட்டதாகும். இந்த மாநாடு இந்த திசையில் மற்றொரு படியாக விளங்கும்.

குடிமைப்பணி பயிற்சி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கான பயிற்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் தேசிய பயிற்சி மாநாடு திறன் மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படுகிறது.

மத்திய பயிற்சி நிறுவனங்கள், மாநில நிர்வாக பயிற்சி நிறுவனங்கள், மண்டல பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து 1500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மத்திய அரசுத் துறைகள், மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்பார்கள்.

இந்த மாறுபட்ட ஒன்றுகூடல் கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதுடன், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு, செயல்படக்கூடிய தீர்வுகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான விரிவான உத்திகளை உருவாக்கும். மாநாட்டில் எட்டு குழு விவாதங்கள் நடைபெறும். ஒவ்வொன்றும் குடிமைப்பணி பயிற்சி நிறுவனங்களான ஆசிரிய மேம்பாடு, பயிற்சி தாக்க மதிப்பீடு மற்றும் உள்ளடக்கத்தை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற முக்கிய விஷயங்களை மையமாகக் கொண்டதாகும்.

Leave a Reply