இந்திய கடற்படை மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் தொழில்நுட்ப ஒத்துழைப்பை நோக்கி முன்னேறுகின்றன.

இந்திய கடற்படைக்கும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 02 ஜூன் 23 அன்று புதுதில்லியில் கையெழுத்தானது. பயிற்சி, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூட்டுப் படிப்புகள், சிறப்பு மையம் (கடற்சார் பொறியியல்), ஐஎன்எஸ் சிவாஜி, லோனாவாலா மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் குழுக்களின் கள அளவிலான சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற துறைகளில் ஒத்துழைப்பதற்கான செயல்முறையை உள்ளடக்கியதாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மெட்டீரியல் பிரிவின் தலைவர் வைஸ் அட்மிரல் சந்தீப் நைதானி மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மாலினி வி ஷங்கர், ஐஏஎஸ் (ஓய்வு) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply