சாகர் பரிக்ராம திட்டத்தின் ஐந்தாவது பகுதிக்கு மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமை வகித்தார்.

மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா சாகர் பரிக்ராம திட்டத்தின் ஐந்தாவது பகுதிக்கு இந்தியாவின் வரலாற்று நுழைவாயிலான மும்பையில் தலைமை வகித்தார். இதைத் தொடர்ந்து இன்றும், நாளையும் மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் ஆறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

முன்னதாக நேற்று மாலை மகாராஷ்டிராவில் ராய்கட்டில் உள்ள கரன்ஜா மீன்பிடித்தலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கிசான் கடன் அட்டைகளையும், இ-ஷ்ரம் அட்டைகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் பிரதமரின் உழவர் மேம்பாட்டுத் திட்டம் மீனவர் சமூக நலனில் மத்திய அரசு  காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது என்றார். இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த திட்டத்தில் அந்தந்த காலகட்டத்திற்கு தேவையான மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருவதையும் அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா நினைவுக்கூர்ந்தார்.  

இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் மீன்வளத்துறை லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. உலகளவில் மீன்வளர்ப்பில் இரண்டாவது இடத்தையும், மீன் உற்பத்தியில் மூன்றாவது இடத்தையும், இந்தியா வகிக்கிறது. இந்தியாவின் நீலப்புரட்சித் திட்டம் மீனவர்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும்,  பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுப்பதற்கும், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply