ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஏப்ரல் 2023-ல் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது 42 சட்டவிரோத பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருட்கள் முடக்கப்பட்டு அது தொடர்புடைய விற்பனையாளர்கள், வடிவமைப்பாளர்கள் 955 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓடும் ரயில்களின் மீது கற்களை வீசும் சம்பவம் அதிகரித்து வருவது குறித்தும் இது பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது குறித்தும் கருத்தில் கொண்டு ரயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இது தொடர்பாக உள்ளூர், கிராம நிர்வாகிகள், பள்ளிகள், ரயில் பாதையையொட்டிய பகுதிகள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் கல்வீச்சு விபரீதம் குறித்து எடுத்துரைத்தனர். இது தொடர்பாக செய்தித்தாள்களிலும் அறிக்கையாக அளிக்கப்படுகிறது. பொது மக்களுக்கு துண்டறிக்கைகளும் விநியோகம் செய்யப்பட்டது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதற்காக 84 பேர் கைது செய்யப்பட்டனர்.

திவாஹர்

Leave a Reply