மத்திய சுகாதாரத்துறை சார்பில் சக்ஷம் எனும் கற்றல் மேலாண்மைத் தகவல் முறை அறிமுகம்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் சக்ஷம் எனும் கற்றல் மேலாண்மைத் தகவல் முறையை அத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், அறிமுகம் செய்து வைத்தார். சக்ஷம் என்பது நீடித்த சுகாதார மேலாண்மை குறித்த தரம் உயர்த்தப்பட்ட அறிவாற்றலைக் குறிக்கும் டிஜிட்டல் தளமாகும்.

மருத்துவக் கல்வி சார்ந்த அனைத்து சுகாதார வல்லுநர்களுக்கும் இணையதளம் வாயிலாக பயிற்சி அளிப்பதற்கான தனித்துவம் வாய்ந்த தளமே சக்ஷம் டிஜிட்டல் தளம் ஆகும். இதன் கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், பெருநகரங்களில் உள்ள பெருநிறுவன மருத்துவமனைகள், சுகாதார பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சுகாதார வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply