மத்திய ஆசிய பறக்கும் பாதையில் (CAF) இடம்பெயர்ந்த பறவைகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான எல்லை நாடுகளின் கூட்டம்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்/ புலம்பெயர்ந்த உயிரினங்களுக்கான மாநாடு (UNEP/CMS) உடன் இணைந்து மத்திய ஆசியப் பறக்கும் பாதையில் புலம்பெயர்ந்து வரும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான எல்லை நாடுகளின் கூட்டத்தை புது தில்லியில் 2023 மே 2 முதல் 4 வரை ஏற்பாடு செய்திருந்தது.

இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மத்திய இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே கூட்டத்தை தொடங்கி வைத்தார். கிளாஸ்கோவில் உள்ள COP-26 இல் செய்யப்பட்ட LIFE (சுற்றுச்சூழல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை) ஐப் பின்பற்றுவதற்கான பிரதமரின் அழைப்பை எதிரொலிக்கும் வகையில்  அமைச்சர் தனது தொடக்க உரையில்,

“ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக மத்திய ஆசிய வான் பாதையின் வரம்பு நாடுகளின் இந்த சந்திப்பின் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நோக்கி உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருப்பது எங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. கூடுதலாக, ஒரு நிலையான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது சக உயிரினங்களின் சுகவாழ்வை அனுமதிக்கும். புலம்பெயர்ந்த பறவைகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் வரும் ஆண்டுகள் அவற்றின் எதிர்காலத்தை  உறுதிசெய்ய மிகவும் முக்கியமானவை. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறைக்கு அழைப்பு விடுக்கும் பிரதமரின் (LIFE) இயக்கத்துடன் இது ஒத்துப்போகிறது. இந்த சந்திப்பின் மூலம், மத்திய ஆசிய வான்பரப்பில் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியின் பொதுவான இலக்கை அடைவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

திவாஹர்

Leave a Reply