ஜி-20 வேளாண் தலைமை விஞ்ஞானிகள் கூட்டத்தின் 2-ம் நாள் அமர்வு.

வாரணாசியில் நடைபெறும் ஜி-20 வேளாண் தலைமை விஞ்ஞானிகளின் கூட்டத்தின் 2-ம் நாளான இன்று, டிஜிட்டல் வேளாண்மை, நீடித்த வேளாண் மதிப்பு சங்கிலி, வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மை கூட்டத்தின் அறிவிக்கை வெளியீடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை செயலர் மற்றும் ஐசிஏஆர் தலைமை இயக்குநர் டாக்டர் ஹிமான்சு பதக் தலைமையில் விவாதங்கள் நடைபெற்றன.காலையில் நடந்த அமர்வில் டிஜிட்டல் வேளாண்மை, உணவு வீணாவதை தடுப்பதற்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.3 நாள் ஜி20 கூட்டம் நேற்று வாரணாசியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் ஜென்ரல் வி கே சிங் தொடங்கி வைத்தார்.ஜி20 உறுப்பு நாடுகள் அழைப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோரைக் கொண்ட 80 வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் அறிவிக்கை 3-வது நாளான நாளை விவாதத்துக்கு பின்னர் வெளியிடப்படும்.

திவாஹர்

Leave a Reply