சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதும் மீட்பதும் பருவநிலை மாற்றத்தின் அளவைக் குறைக்கவும் அதன் தாக்கங்களை சமாளிக்கவும் உதவும் என்று பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதும்  மீட்பதும்  பருவநிலை மாற்றத்தின் அளவைக் குறைக்கவும் அதன் தாக்கங்களை சமாளிக்கவும் உதவும் என்று  மத்திய வனம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு  பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.  ஜப்பானின் சப்போரோவில் காலநிலை, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஜி 7 அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அவர், சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுடன் இணைந்து, காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளை நாம் முழுமையாகக் கையாள்வது முக்கியம் என்றார். இது ஜி 7 நாடுகளின் காலநிலை, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த சந்திப்பின் மையப்பொருளாக  இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் G20 தலைமைத்துவத்தில்

பருவநிலை மாற்றம், பாலைவனமாதல், பல்லுயிர் இழப்பு ஆகியவற்றை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயல்படுகிறது என்றார். இதன் விளைவுகள் ஒன்றோடொன்று ஆழமாக  இணைக்கப்பட்டுள்ளன, இவை மனிதகுலத்திற்கு இருத்தலியல் சவால்களாக உள்ளன என்று திரு யாதவ் கூறினார். இந்த சவால்களுக்கு விடைகாணும் வகையில், ரியோ மாநாடுகளில்  கொள்கைகள் அடிப்படையில் ஒருமித்த அணுகுமுறை மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

அண்மையில் மாண்ட்ரீலில் நடைபெற்ற பல்லுயிர் பெருக்க மாநாட்டில், உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை நாம்  ஏற்றுக்கொண்டோம். ஷ்ரம் எல் ஷேக்கில் நடைபெற்ற சிஓபி27 ல், இழப்பு மற்றும் சேத நிதி போன்ற பிரச்சனைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், செல்வதற்கு இன்னும் நீண்ட தூரம் உள்ளது என்று திரு  யாதவ் கூறினார்.

எடுத்துக்காட்டாக, ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்தியா நிலச் சீரழிவைத் தடுத்து நிறுத்துதல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை விரைவுபடுத்துதல், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் போன்ற முன்னுரிமைப் பகுதிகளில் இந்த அணுகுமுறையை ஆழமாக மேற்கொண்டுள்ளது என்றும் இதில்  தணிப்பு மற்றும் தழுவல்  உட்பொதித்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50 ஆண்டுகளை முன்னிட்டு சர்வதேசப் புலிகள்  கூட்டணி அண்மையில் தொடங்கப்பட்டது பற்றி குறிப்பிட்ட திரு யாதவ், உண்மையில்  புலிகளையும் அவற்றின் வாழ்விடங்களையும்  பாதுகாப்பதன் மூலம் பூமியில் உள்ள சில முக்கியமான இயற்கைச்சூழல் அமைப்புகளைக் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு பாதுகாக்க முடியும் என்றும்  லட்சக் கணக்கான மக்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுப்  பாதுகாப்பையும், வனச் சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தையும்  வழங்கும் என்றும் கூறினார்.

நாம் ஒரே பூமியைக் கொண்டுள்ளோம், நாம் ஒரே குடும்பமாய்  இருக்கிறோம்,  ஒரே எதிர்காலத்தைக் கொண்டுள்ளோம் என்ற உண்மையைக் கருத்தில்கொண்டு ஒன்றுபட்ட நோக்கம், ஒன்றுபட்ட செயல்பாடு என்ற வகையில் காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, மாசுபாடு ஆகிய மூன்று சவால்களுக்கு எதிராகத்  திறம்பட போராடுவதை ஜி7 நாடுகளின் தலைமை உறுதிசெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என திரு  யாதவ் கூறினார்.  சென்னையில் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்தில் அனைவரையும் வரவேற்க  ஆவலுடன் காத்திருப்பதாகவும்  மத்திய அமைச்சர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply