பருவநிலை மாற்றத்திற்கு எதிரான முன்னேற்றமே நமது முதல் பாதுகாப்பு என்பதை ஐ பி சி சி எ ஆர் 6 அறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.

2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான உலகளாவிய இலக்குக்கு, வளர்ந்த நாடுகளின் மாசு வெளியீடு குறைக்கப்பட வேண்டும். திரு. யாதவ்

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் தொழிலாளர் & வேலைவாய்ப்புக்கான மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூறுகையில், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான முன்னேற்றமே நமது முதல் பாதுகாப்பு என்பதை ஐ பி சி சி எ ஆர் 6 (IPCC AR 6)அறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது. பாரிஸ் உடன்படிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, உலகளாவிய வெப்பநிலை இலக்கினை அடைய, கார்பன்டை ஆக்சைடு முதன்மையான ஜி ஹச் ஜி  ஆகக் குறைக்கப்பட வேண்டும் என்ற அறிவியல் பார்வையை அறிக்கை வலுப்படுத்துகிறது. ஜப்பானின் சப்போரோவில் பருவநிலை, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஜி7 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான உலகளாவிய இலக்குக்கு வளர்ந்த நாடுகளின் மாசு வெளியீட்டை மட்டுப்படுத்துவது அவசியம் என்றார். பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மாசு தாக்கங்களுக்கு எதிராக தேவையான பாதுகாப்பை வழங்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அதன் மக்களுக்குத் தேவையான வளர்ச்சியை அடைய இது இடம் அளிக்கும் என்றார்.

திரு. யாதவ், தொழில்துறை புரட்சியின் வருகைக்குப் பிறகு இயற்கை வளங்களை அதிகமாக சுரண்டுவதும் பரவலான சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுத்தது என்றார். இது இயற்கையின் சமநிலையை மாற்றும். இது பூமிக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

பருவநிலை மாற்றம், மாசுபாடு, பல்லுயிர் இழப்பு போன்ற சவால்களில் இருந்து நமது பூமியைக் காப்பாற்ற, ரியோ மாநாட்டின் ஸ்தாபகக் கொள்கைகளால் வழிநடத்தப்படும் கூட்டு நடவடிக்கை தேவை என்றார்.

வளரும் நாடுகளுக்கும் செயல்படுத்தல், நிதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை தேவை என்று மத்திய அமைச்சர் கூறினார். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நிதியில் வளர்ந்த நாடுகள் தங்கள் உறுதிமொழிகளை சிறப்பாகச் செய்யும் என்றும், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் பல்லுயிர் இழப்பைக் கையாள்வதற்கும் அதை வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

கார்பன் சமநிலை மற்றும் இலக்குகளை அடைவது ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாத வரையிலும், வளர்ந்த நாடுகள் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை நிறைவேற்றும் வரையிலும் முன்னேற்றம் சாத்தியமில்லை என்றும் திரு. யாதவ் கூறினார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியா இதுவரை கவனம் செலுத்துவதாக திரு யாதவ் கூறினார். உலகெங்கிலும் உள்ள அரசுகள் தனிநபர்கள் மட்டத்தில் இதை ஒரு பங்கேற்பு செயல்முறையாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்தார்.

தனிப்பட்ட செயல்கள் புரட்சிக்கான சாத்தியக்கூறுகள் கொண்டது என்று  மத்திய அமைச்சர் கூறினார். ஷர்ம் எல் ஷேக்கில் உள்ள COP 27 இல், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நிலையான வாழ்க்கை முறைகள் நுகர்வு மற்றும் உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறினார்.

பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் மாசுபாடு ஆகியவற்றுக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் உலகிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று திரு யாதவ், மிஷன் லைஃப் உணர்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை (LiFE) ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொண்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply