ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த 9 ஆண்டுகளில் 300 மடங்குகள் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த 9 ஆண்டுகளில் 300 மடங்குகள் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங் 2014-ம் ஆண்டிற்கு முன்பாக 350 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்பு ஸ்டார்ட்-அப் திட்டத்தின் மூலம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

விண்வெளித்துறையில் தனியார் துறையினரும் பங்கேற்க பிரதமர் மோடி அனுமதித்த நிலையில் வெறும் 3 ஆண்டுகளில் விண்வெளித்துறையில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இடம்பெற்றதாக அவர் கூறினார். அதேபோல் உயிரி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 50-லிருந்து சுமார் 6,000-ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

திவாஹர்

Leave a Reply