இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய  குடியரசுத்தலைவர், தங்களது பொறுப்புகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக பல மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதில் சிக்கல் நீடிப்பதாகத் தெரிவித்தார். இந்தி்ரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் அத்தகைய மாணவர்களுக்கு கல்வியை வழங்க உதவுகின்றன. பல்வேறு வேலைகளை செய்பவர்கள்,   சுய தொழில் செய்பவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து திறன் மேம்பாட்டிற்காக கல்வி பெறுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற பணியாளர்கள் மற்றும் கற்பவர்கள் தொலைதூரக் கல்வியை பெறுவதன் மூலம் வேலையின்மையிலிருந்து வெளியே வர முடியும் என்றும் அவர் கூறினார். எனவே, தொலைதூரக் கல்வியானது பரந்த சமூக-பொருளாதார பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இத்தகைய மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி மூலம் உயர்கல்வி வழங்கி இந்தப் பல்கலைக்கழகம்   மிகவும் பயனுள்ள சேவையை வழங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

‘உயர்கல்விக்கான அணுகலை’ ஊக்குவிப்பதில் இந்த பல்கலைக்கழகம் பாராட்டுக்குரிய பங்கை ஆற்றியுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். தொலைதூரப் பகுதிகள், கிராமப்புறங்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகளை வழங்குவதில் பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் கல்வித் திட்டங்களில் நெகிழ்வுத்தன்மையின் உதவியுடன், பல மாணவர்கள் தங்கள் வேலை, குடும்பம் மற்றும் பிற பொறுப்புகளை நிர்வகிக்கும் போது உயர் படிப்பைத் தொடர்ந்தனர் என்றார் அவர்.

கல்வியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றுவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், 2035-ம் ஆண்டிற்குள் உயர்கல்வியில் 50 சதவீத மொத்த சேர்க்கை விகிதத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

எஸ்.சதிஸ்.சர்மா

Leave a Reply