2021-22ல் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 315.7 மில்லியன் டன் அளவைத் தொட்டது.

பருவநிலை மாற்ற சவால்களை மீறி 2021-22ல் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி சாதனை அளவான 315.7 மில்லியன் டன்களை தொட்டது என்று மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளார்.  மேலும், 2022-23க்கான முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி (காரிஃப் மட்டும்), நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 149.9 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஐந்து ஆண்டுகளின் (2016-17 முதல் 2020 வரையிலான) சராசரி காரீஃப் உணவு தானிய உற்பத்தியை விட அதிகமாகும்.  பருப்பு வகைகளின் உற்பத்தியும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 23.8 மில்லியன் டன்களை விட அதிகமாக உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

 கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை மற்றும் மீன்வளம்

இந்திய விவசாயத்தின் தொடர்புடைய துறைகளான கால்நடைகள், வனம் மற்றும் மரம் வெட்டுதல், மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு ஆகியவை படிப்படியாக வலுவான வளர்ச்சியின் துறைகளாக மாறி, சிறந்த பண்ணை வருமானத்திற்கான ஆதாரமாக மாறிவருகின்றன என்று ஆய்வு கூறுகிறது.

கால்நடைப் பராமரிப்பு துறையானது 2014-15 முதல் 2020-21 வரையிலான காலத்தில்  7.9 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது.  இதேபோல், மீன்வளத் துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 2016-17 முதல் சுமார் 7 சதவீதமாக உள்ளது. எட்டு கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு அளிக்கும் பால்வளத் துறை, முட்டை மற்றும் இறைச்சி போன்ற பொருட்களுடன் முக்கியமானதாகும். உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும், முட்டை உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் எட்டாவது இடத்திலும் உள்ளதாக கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.

தொடர்புடைய துறைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துதுள்ளது. கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், மொத்தம் ரூ.3,731.4 கோடி செலவில் 116 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ 15,000 கோடி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா, மொத்தம் ரூ.20,050 கோடி. இந்தியாவில் மீன்பிடித் துறையில் இதுவரை இல்லாத மிக உயர்ந்த முதலீட்டைக் குறிக்கிறது, மீனவர்கள், மீன் விவசாயிகள் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் அதே வேளையில் மீன்வளத் துறையின் நிலையான மற்றும் பொறுப்பான வளர்ச்சியை இயக்குவதற்காக நாடு முழுவதும் 21ம்- நிதியாண்டு முதல் 25–ம் நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

உணவு பாதுகாப்பு

இந்தியாவில் உணவு மேலாண்மைத் திட்டமானது விவசாயிகளிடமிருந்து லாபகரமான விலையில் உணவு தானியங்களை கொள்முதல் செய்தல், நுகர்வோருக்கு, குறிப்பாக சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு மலிவு விலையில் விநியோகம் செய்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் விலை நிலைத்தன்மைக்காக உணவு கையிருப்புப் பராமரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக கணக்கெடுப்பு விவரிக்கிறது.  தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2023 ஜனவரி 1 முதல் ஓராண்டுக்கு சுமார் 81.35 கோடி பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஏழைகளின் நிதிச் சுமையை நீக்க, பிற நலத் திட்டங்களின் கீழ் உணவு மானியங்களுக்காக இந்த காலகட்டத்தில் ரூ 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவழிக்கப்பட்டுள்ளது என்று கணக்கெடுப்பு கூறுகிறது.

திவாஹர்

Leave a Reply