வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இல்லம் தோறும் தியானம் திட்டத்தின் கீழ் ஒரு மணி நேர தியானப் பயிற்சி அறிமுகம்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இல்லந்தோறும் தியானம் என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக ஒரு மணி நேர தியானப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டது.

புதுதில்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகமான விக்யான் பவனின் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் இந்த ஒரு மணி நேர தியானப் பயிற்சி வழங்கப்பட்டது.

வாழும் கலையைச் சேர்ந்த திருமதி. அருணிமா சின்ஹா திரு.சுயாஷ் ராஜ் சிவம் ஆகியோர் தலைமையில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்களுக்கு அவர்களது மனநலம் மற்றும் ஆளுமையை மேம்படுத்திக் கொள்ள உதவும் ஒரு மணி நேர தியானப் பயிற்சி வழங்கப்பட்டது.

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நமக்கு உத்வேகத்தையும், மனஉறுதியையும் அளிக்கும் தியானப் பயிற்சியையும், மனநலத்தையும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உதவும் என வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திவாஹர்

Leave a Reply