மகாநதி நிலக்கரிச்சுரங்கம் சார்பில் ஒடிசாவில் கண்கவர் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் நிலக்கரி அருங்காட்சியகம் உருவாக்கபட்டுள்ளது.

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள முதன்மையான பொதுத்துறை நிறுவனமான மகாநதி நிலக்கரிச்சுரங்க நிறுவனம் (எம்சிஎல்) நிலக்கரி உற்பத்தியில் தொடர்ந்து புதிய உச்சங்களை அடைந்து வருகிறது. சுற்றுச் சூழலுக்கு உகந்த நீடிக்கவல்ல சுரங்க நடைமுறைகளையும் பின்பற்றிவருகிறது. இந்த திசையில் எம்சிஎல்-ன் சமீபத்திய சாதனை, ஒடிசாவின் ஜார்சுகுடாவில் சந்திர சேகர் ஆசாத் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் நிலக்கரி அருங்காட்சியகத்தை உருவாக்கியிருப்பதாகும்.

பூங்காவிற்குள் இருக்கும் நிலக்கரி அருங்காட்சியகம், இந்தியாவில் நிலக்கரிச் சுரங்கத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் சரியான பார்வையைக் கொண்டதாகும். நிலத்தடி மற்றும் திறந்தவெளி சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் வேலை மாதிரிகள், நிலக்கரி சுரங்க உபகரணங்கள்/இயந்திரங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேற்பரப்பு சுரங்கம், டம்பர், கிரேன், டிப்பர், டோசர், பெல்ட் கன்வேயர், நிலக்கரி வெட்டும் இயந்திரம், துளையிடும் இயந்திரம் மற்றும் பேக்ஹோ ஆகியவை இவற்றில் அடங்கும்.

திவாஹர்

Leave a Reply