ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்படத் திருவிழா 2023, ஜனவரி 27 முதல் 31 வரை மும்பையில் நடைபெற உள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்படத் திருவிழாவை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்  2023, ஜனவரி 27 முதல் 31 வரை மும்பையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவத்தை நினைவு கூறும் வகையில், எஸ்சிஓ திரைப்பட திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திருவிழா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் செயலாளர் நீர்ஜா சேகர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களை இணைக்கும் வகையிலும், சினிமாத் துறையில் கூட்டாண்மையை ஏற்படுத்தும் வகையிலும், திரைப்பட திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

போட்டிப் பிரிவு மற்றும் போட்டிப் பிரிவில் இல்லாத திரைப்படங்கள் என மொத்தம் 57 திரைப்படங்கள் திரையிடப்படும் என்று அவர் தெரிவித்தார். அத்துடன் உரையாடல் நிகழ்ச்சி, நாடுகள் மற்றும் மாநிலங்களின் அரங்குகள், புகைப்படம் மற்றும் சுவரொட்டிக் கண்காட்சிகள், கைவினைப்பொருட்கள் அரங்குகள் உள்ளிட்டவை இடம் பெற உள்ளதாக அவர் கூறினார்.   தொடக்க நிகழ்ச்சி மும்பையில் உள்ள ஜாம்ஷெட் பாபா திரையரங்கில் 27 ஜனவரி 2023 அன்று நடைபெறும் என்று தெரிவித்தார்.  சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் ஆகியவற்றுக்கான வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து போட்டிப் பிரிவில் மராத்திய திரைப்படம் கோதாவரியும், குஜராத்தி திரைப்படம் தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

திவாஹர்

Leave a Reply